Friday, July 27, 2012

மும்பையின் மழைகால அழகுகள்

மும்பையில் தற்போது பொழிகின்ற  மழையின் அழகே தனிதான்...



மழைக்காக ஓரமாக ஓய்வெடுக்கும் காகம்...






சிறுவர்கள் மழை என்றும் பாராமல்  விளையாடுகின்றன.





அமர்ந்துபேச அமைதியான பூங்கா. குழந்தைகள் விளையாட பொருத்தமான  இடம்

 




அழகான மரங்களை சுற்றி வண்ண வண்ண மலர்கள் .



மும்பையில் தற்போது பொழிகின்ற  மழையின் அழகே தனிதான்... ஆமாம் சிறிது நேரம் மழைபெய்யும் அதன் பிறகு அந்த இடத்தில் மழை பொழிந்ததாகவே தெரியாது.... அருமையாக இருக்கும்

இந்த பூங்கா எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளது.


16 comments:

Radha rani said...

அங்க மழை காலம் ஆரம்பித்து விட்டதா விஜி. இங்க வருண ஜெபம் இருந்தாலும் வருண பகவான் எட்டி பாக்க மாட்டேங்கறார்..கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமையான பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மும்பையில் தற்போது பொழிகின்ற மழையின் அழகே தனிதான்...//

அடடா, மழை என்பதே எங்கு பெய்தாலும் அழகு தான்.

தூர் வாரப்பட்ட ஏரிகள், குளங்கள், ஆறுகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் ஆகிய இவற்றில் பெய்தால் இன்னும் அழகாகவும், மக்களுக்குப் பயனுள்ளதாகவும் அமையும்.

மும்பையில் விண்ணை முட்டும், கோபுரம் போன்ற கட்டடங்களுக்கு, கும்பாபிஷேகம் செய்தது போலப் பெய்துள்ளதால், அது மிகவும் அழகாக அமைந்துள்ளது. ;)))))

அருமையான படங்கள்.

பாராட்டுக்கள். அன்புடன் vgk

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க...
....ம்..... இங்கே இன்னும் வெயில் கொளுத்துது.....
நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மழைக்காக ஓரமாக ஓய்வெடுக்கும் காகம்... //

ஆஹா! அந்தக்காக்காவை எப்படியோ காக்காப்பிடித்து, புகைப்படமாக எடுத்து, பதிவினில் கொண்டுவந்து அசத்தி விட்டீர்களே!

பாராட்டுக்கள்.... உங்களுக்கும் போஸ் கொடுத்த காக்காவுக்கும். ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சிறுவர்கள் மழை என்றும் பாராமல் விளையாடுகின்றன. //

பார்க்கவே எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. மழையினில் நனைவது சிறுவர்களுக்கு எப்போதுமே மகத்தான சந்தோஷம் தான்.

//அமர்ந்துபேச அமைதியான பூங்கா. குழந்தைகள் விழையாட பொருத்தமான இடம் //

”விழையாட” என்பதை “விளையாட”
என மாற்றிவிடுங்கள். அமர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால், பேச்சு சுவாரஸ்யத்தில் தவறாக அடித்து விட்டீர்கள் போலத்தெரிகிறது. ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்த பூங்கா எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளது.//

ஆஹா! கொடுத்துவைத்த மஹராஜி தான். தினமும் பொழுதுபோக்க ஏற்ற இடமாக வீட்டுக்கு அருகிலேயே .... சூப்பர். சந்தோஷம். ;)

vgk

VijiParthiban said...

இங்கு மழைகாலம் ஜூன் மாதமே ஆரம்பித்துவிட்டது அக்கா... ஆனாலும் இந்த வருடம் இங்கு மழை குறைவுதான்... கருத்திற்கு மிக்க நன்றி அக்கா...
ஆமாம் அக்கா தமிழ்நாட்டில் மழையே இல்லை அதனால் பசுமையும் இல்லை என்று நான் தெரிந்துகொண்டேன்... மிகவும் கஷ்டமாக இருக்கிறது.... சீக்கிரம் வருணபகவான் வழிகாட்டுவார்....

VijiParthiban said...

மிக்க நன்றி திண்டுக்கல் சகோ அவர்களே.... விரைவில் அங்கும் மழை பொழியட்டும்....

VijiParthiban said...

ஐயா உங்களின் ஒவ்வொரு கருத்திற்கும் மிக்க நன்றி... ஆமாம் ஐயா மழை என்றாலே அழகுதான்.... நானும், போஸ் கொடுத்த காக்காவும் தங்களின் பாராட்டுக்கு எங்களுடைய நன்றியினை தெரிவிக்கிறோம்.தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி ஐயா.... திருத்திவிட்டேன்...

ashok said...

happy rainy days :)

மாதேவி said...

குளிர்சியுடன் அழகாக இருக்கின்றது.

VijiParthiban said...

கருத்திற்கு மிக்க நன்றி
அசோக் சகோ.
மாதேவி .

HARISH said...

ஓய்வெடுக்கும் காகம் அருமை !

VijiParthiban said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Harish...

சாந்தி மாரியப்பன் said...

பார்க்கப் பார்க்க தெவிட்டாத அழகு.. இப்ப மழை ஜோரா இருக்குதில்லே :-)

VijiParthiban said...

ஆமாம் அக்கா மழையின் அழகு தெவிட்டாது தான்... தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி..